தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்ற பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வசனங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதனால், படத்தை தமிழ்நாடு பாஜக பிரபமுர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

mersal

அதுவே படத்திற்கு மிகப் பெரிய பிரமோஷனைக் கொடுத்து படம் 222 கோடி வசூலைக் கடக்க உதவியது. அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றெல்லாம் பேச்சு எழுந்தது, வழக்கும் போடப்பட்டது. பிரச்சனைகள் எழுந்த பின்னும், தமிழில் அந்த வசனங்கள் நீக்கப்படவில்லை.

அந்த வசனங்களால்தான் தெலுங்கிலும் மெர்சல் படத்தின் டப்பிங்கான அதிரிந்தி படத்திற்கு சென்சார் கிடைப்பதில் தாமதம் ஆனது. நேற்று ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 454 தியேட்டர்களில் அதிரிந்தி படம் வெளியாகியுள்ளது.

mersal

ஜிஎஸ்டி பற்றிய வசனமும், ஒலியை செய்த பிறகே தணிக்கை வழங்கப்பட்டுள்ளதாம். தெலுங்கு டப்பிங் உரிமை 5 கோடி ரூபாய்க்குதான் விற்கப்பட்டுள்ளதாம். அதனால், படம் எதிர்பார்த்த லாபத்தைக் கொடுத்துவிடும் என்கிறார்கள்.

மொத்த வசூலாக 20 கோடி வரை கிடைத்தால் இந்த வாரம் மெர்சல் படத்தின் மொத்த வசூல், தெலுங்கையும் சேர்த்து 250 கோடியைத் தாண்டிவிடும் என்கிற்றனர்.

ippadai vellum

விஜய் எப்போதும் தனது படங்களைத் தாண்டி எந்த ஒரு நல்ல படமாக இருந்தாலும் தயங்காமல் பாராட்டக்கூடியவர். அது புதுமுக நடிகரோ அல்லது இயக்குனரோ யாராக இருந்தாலும் சரி திறமைகளையும் அதிசிறந்த படைப்புகளையும் தயங்காமல் பாராட்டக்கூடியவர்.

வழக்கமாக எல்லோரும் கூறுவது போல் சூட்டிங்கில் அமைதியாக இருந்தாலும், கொஞ்சம் ஜாலியான நடிகரும் கூட. தற்போது இப்படை வெல்லும் படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் ஈடுபட்டுவரும் உதயநிதி ஒரு பேட்டியில் , ‘எம்புட்டு இருக்குது ஆச என்ற பாடலுக்கு விஜயும், உதயநிதியும் சேர்ந்து ஆடியதாக கூறப்படுகிறது அது உண்மையா எனக் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், அந்த பாடல் எனக்கு பிடிக்கும் எப்போது டீவியில் அந்த பாட்டு ஓடினாலும் அதற்க்கு ஆடிவிடுவேன், இதனை வைத்து விஜய் அண்ணன் என்னை ராகிங் செய்தார்.என தன்னை ராகிங் செய்ததாக கூறினார் உதயநிதி ஸ்டாலின்