MGR, விஜயகாந்த் சந்தித்த அதே பிரச்சனை, தாங்குவாரா தளபதி.. கொடி ஏற்றியதுக்கே ஆடி போன அரசியல்வாதிகள்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியலுக்கு வருவதால் அறிவித்திருந்த நிலையில் நேற்று தன்னுடைய கட்சிக்கு முழு வடிவம் கொடுத்திருக்கிறார். திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடி மற்றும், கொடி பாடல் வெளியிடப்பட்டது.

இதைப்பற்றி நிறைய சினிமா விமர்சகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல விமர்சகர் செய்யாறு பாலு இது குறித்து பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.

இந்த பேட்டியில் பேசியவர் நேற்று விஜய் கட்சி கொடி அறிமுகமானதிலிருந்து ஒரு பக்கம் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் ரோல் செய்வதை பற்றி பேசி இருந்தார். பல வருட கனவாக ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கும் ஒருவர் அதன் கொடியை யோசிக்காமல் வடிவமைக்க மாட்டார்.

எத்தனையோ பேரின் உழைப்பு இதில் இருக்கும். அதை அசால்ட் ஆக பெவிகால் விளம்பரத்துடனும், வேறு சில விளம்பரத்துடனும் ஒப்பிட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வருபவர்களை இப்படி கிண்டல் செய்வது தவறு என சொல்லி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் நேற்று அதிமுக பிரமுகர் ஒருவர் விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியதை பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். அவருடைய கருத்தில் விரைவில் விஜய் வீட்டுக்கு ஐடி ரெய்டு வரும் என சொல்லி இருப்பது தவறுதலான கருத்து என செய்யாறு பாலு பேசி இருக்கிறார்.

MGR, விஜயகாந்த் சந்தித்த அதே பிரச்சனை

இந்த ஐடி ரெய்டு என்பது விஜய் மட்டும் சந்திக்கும் விஷயம் கிடையாது. முதன் முதலில் இது ஆரம்பித்தது எம்ஜிஆர் காலத்தில் என புதிய தகவலை சொல்லி இருக்கிறார். எமர்ஜென்சி காலத்தில் தமிழகத்தில் திமுகவின் ஆதிக்கம் அதிகமாக இருந்திருக்கிறது.

அப்போது திமுகவை அமைதியாக இருக்க வைக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திமுக நிர்வாகிகள் வீட்டில் ஐடி ரெய்டு நடத்த அறிவுறுத்தியதாக செய்யாறு பாலு சொல்லி இருக்கிறார். அப்போது எம்ஜிஆர் திமுகவில் இருந்ததால் அவருடைய வீட்டிலும் ரெய்டு நடந்திருக்கிறது.

அப்போது ரெய்டுக்கு வந்த அதிகாரி ஒருவர் எதற்கும் நீங்கள் பிரதமர் இந்திரா காந்தி இடம் பேசிப்பாருங்கள் என எம்.ஜி.ஆருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். அதன் பின்னால் தான் எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகியதாகவும் செய்யாறு பாலு சொல்லி இருக்கிறார்.

அதே போன்று கேப்டன் விஜயகாந்த் அரசியலுக்கு வருவதாய் இருந்தபோது அவருடைய வீடு மற்றும் திருமண மண்டபத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அதே போன்று தான் விஜய் மெர்சல் பட சமையத்தில் ஜிஎஸ்டி பற்றி அந்த படத்தில் வசனங்கள் பேசியதால் அவருடைய வீட்டில் ரெய்டு நடந்தது.

அதை தொடர்ந்து மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்த விஜய்யை அங்கிருந்து சென்னைக்கு வரவழைத்து அவருடைய வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். இதனால் விஜய்க்கு ரெய்டு என்பது ஒன்றும் புதிதல்ல. விஜய்யை அவருடைய போக்கிலேயே விட்டுவிட்டு அவருக்கு மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பது தான் அரசியல் நுண் அறிவு.

அதை விட்டுவிட்டு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்த்தினால் விஜய் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டு விடும். அனுதாப ஓட்டு எத்தனையோ அரசியலை புரட்டி போட்டு இருக்கிறது என விமர்சகர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.

Next Story

- Advertisement -