fbpx
Connect with us

Cinemapettai

காஜல் அகர்வாலுக்கு மேக்கப்மேன் வேலை பார்த்த தளபதி.. வைரலாகும் விஜய்யின் குசும்பு வீடியோ

Videos | வீடியோக்கள்

காஜல் அகர்வாலுக்கு மேக்கப்மேன் வேலை பார்த்த தளபதி.. வைரலாகும் விஜய்யின் குசும்பு வீடியோ

தளபதி விஜய் பெரும்பாலும் படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருப்பதாகத்தான் பல நடிகர்கள் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் தளபதி விஜய் அப்படி இல்லை என்பதை சமீப காலமாக பலரும் நிரூபித்து வருகின்றனர்.

தளபதி விஜய் தனக்கு பிடித்தமான படக்குழுவினர் என்றால் அவராகவே வழியே போய் பேசி ஜாலியாக இருப்பாராம். அதுமட்டுமில்லாமல் புதிய நடிகர்கள் யார் வந்தாலும் அவர்களுடன் சகஜமாக பேசி பழகி விடுவாராம்.

பெரும்பாலும் நடிகைகளிடம் அமைதியாக தான் இருப்பார் என்கிறார்கள். ஆனால் தன்னுடன் பல படங்களில் ஜோடி போட்ட திரிஷா மற்றும் அசின் ஆகியோர் இடம் எப்போதுமே ஜாலியாகத்தான் இருப்பாராம் விஜய்.

அந்த வகையில் விஜய்யின் ஃபேவரட் நடிகையாக மாறியுள்ளார் காஜல் அகர்வால். இதுவரை தளபதி விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் என மூன்று படங்களில் ஜோடி போட்டுள்ளார்.

இதில் ஜில்லா படத்தில் இடம்பெற்ற எப்ப மாமா ட்ரீட்டு எனும் பாடல் படப்பிடிப்பின்போது காஜல் அகர்வாலுக்கு மேக்கப் மேனாக விளையாட்டு காட்டியுள்ளார் தளபதி விஜய்.

அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது. வீடியோ பார்க்க:- Click here

Continue Reading
To Top