Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் தற்போது சிறகடிக்கும் ஆசை மற்றும் மகாநதி சீரியல் தான் தூள் கிளப்பி வருகிறது. அதிலும் மகாநதி சீரியலில் தற்போது வருகிற காட்சியை பார்க்கும் பொழுது இதை பார்க்க தான் இத்தனை நாளாக காத்துக் கொண்டிருந்தோம் என்று சொல்வதற்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
என்னதான் விஜய்யும் காவிரியும் சூழ்நிலை காரணமாக ஒப்பந்த முறையில் கல்யாணம் பண்ணினாலும் இப்பொழுது அவர்களின் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது நிஜ கணவன் மனைவியாக தான் இருக்கிறார்கள். அந்த வகையில் தாலி பெருக்கு பங்க்ஷன் நிகழ்ச்சியை விஜய் மிகவும் பிரமாதமான ஏற்பாடுகளை பண்ணி அசத்தி விட்டார்.
அதிலும் காவிரிக்கு புடவை கட்டும் பொழுது இரண்டு பேரும் கண்ணாலேயே நோக்கி பேசிக்கொண்ட வார்த்தைக்கு அளவே இல்லை. கிடைக்கிற கேப்பில் எல்லாம் ரொமான்ஸை தெறிக்க விடுகிறார்கள். ஏற்கனவே விஜய் மனசுக்குள் காவேரி இடம் பிடித்து விட்டார். அதே மாதிரி காவிரிக்கும் விஜய் தான் நம்முடைய கணவர் என்று நினைப்பு வந்துவிட்டது.
அலறி அடிச்சு ஓடப்போகும் ராகினி
இப்படியே போனால் தாத்தா ஆசைப்பட்ட மாதிரி இவர்களுடைய வாழ்க்கை முழுமை அடையும் விதமாக இவர்களுக்கு பெயர் சொல்ல ஒரு குழந்தை வந்து விடும் போல. முக்கியமாக கங்கா, பசுபதியால் காவிரிக்கு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காக பங்க்ஷனில் கலந்து கொண்டார்.
அத்துடன் காவிரிக்கு முழு ஆதரவையும் கொடுத்து உண்மையான அக்கா தங்கை பாசம் என்றால் என்ன என்பதை நிரூபித்து விட்டார். ஆனால் காவேரி வருவதற்கு பின்னாடி கண்டிப்பாக இதில் விஜய் ஏதாவது காய் நகர்த்திருப்பார் என்பது போல் தெரிகிறது.
இவங்களோட காதலையும் ரொமான்ஸையும் பார்க்கும் பொழுது இவங்களா கான்ட்ராக்ட் போட்டு கணவன் மனைவிகளாக நடிக்கிறார்கள் என்று யோசிக்க வைக்கிறது. அந்த அளவிற்கு காவிரிக்கு முழு ஆதரவையும் கொடுத்து யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் ஒரு உண்மையான கணவர் எந்த அளவிற்கு இருக்க வேண்டுமோ அதை சரியாக செய்து வருகிறார்.
அந்த வகையில் விஜய்யும் காவிரியும் சேர்ந்து ராகினிக்கு கொடுக்கும் டார்ச்சலால் இந்த வீட்டுக்கு மருமகளாக வரவேண்டும் என்கிற எண்ணமே அவருக்கு போய்விடும். அந்த அளவிற்கு காவிரிக்கு பக்கபலமாக இருந்து விஜய் பிளான் பண்ணி பசுபதியையும் ராகினியும் ஓட ஓட விரட்ட போகிறார்.