திருமலை படப்பிடிப்பில் விஜய்யை ஒதுக்கி வைத்த ஜோதிகா.. காரணம் சூர்யாவா?

விஜய் மற்றும் ஜோதிகா கூட்டணிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முதல் முறையாக விஜய் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த குஷி திரைப்படம் வசூல் சாதனை செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

2000 ஆண்டு வெளியான திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதே ஜோடி மீண்டும் 2003 ஆம் ஆண்டு ரமணா இயக்கத்தில் வெளியான திருமலை படத்திலும் தொடர்ந்தது. அந்த படமும் சூப்பர் டூப்பர் வெற்றியை சுவைத்தது.

அதேபோல் பிரண்ட்ஸ் படத்திலும் விஜய் மற்றும் ஜோதிகா இருவரும் நடிக்க இருந்து பின்னர் கால்சீட் காரணமாக ஜோதிகா படத்தில் இருந்து விலகியதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

ஆனால் திருமலை படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது இருவருக்குள்ளும் சரியாக பேச்சு வார்த்தை இல்லை எனவும், காட்சி முடிந்தவுடன் இருவரும் தனித் தனியே அமர்ந்து கொள்வார்கள் எனவும் படத்தின் இயக்குனர் ரமணா ஒருமுறை ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அப்போது சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் காதல் இருந்ததால்தான் சூர்யா விஜய்யிடம் ஜோதிகாவை பேசக்கூடாது என்று கட்டளையிட்டதாக செய்திகள் பரவி வைரல் ஆனது.

அப்படி விஜய் மற்றும் சூர்யா இருவருக்கும் ஈகோ இருந்திருந்தால் சில வருடங்கள் கழித்து சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் நிறுவனத்திற்காக வீடியோ எடுத்த போது விஜய் அதில் நடித்த கொடுத்திருக்க மாட்டார். என்ன காரணத்திற்காக தற்போது இந்த செய்தி மீண்டும் கோலிவுட் வட்டாரங்களில் வட்டமிடுகிறது என்பது தெரியாமல் இருதரப்பு ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

vijay-jyothika-thirumalai
vijay-jyothika-thirumalai
- Advertisement -spot_img

Trending News