தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது.

இப்படத்தில் சமந்தா மற்றும் காஜல் அகர்வால் கதாநாயகிகளாக நடிப்பார்கள் என ஏற்கனவே கூறப்பட்டு வந்துள்ள நிலையில் இப்படத்தில் நடிகை ஜோதிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அட்லி அண்மையில் ஜோதிகாவை சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. இது உறுதியாகும் பச்சத்தில் திருமலை படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து விஜய் – ஜோதிகா கூட்டணி இணைகிறது.