fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

4 வருடங்களுக்குப் பிறகு பிரபல தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் விஜய்.. அப்போ அவர் கதி, அதோ கதிதானா!

thalapathy-vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

4 வருடங்களுக்குப் பிறகு பிரபல தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் விஜய்.. அப்போ அவர் கதி, அதோ கதிதானா!

தமிழ் சினிமாவில் தற்போது மிகப் பெரிய வியாபாரம் உள்ள நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொள்கின்றனர்.

அதற்கு காரணம் சமீபத்தில் வந்த பிகில்படம் 300 கோடி வசூல் செய்தது தான். அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படம் ரிலீஸுக்கு முன்னரே 200 கோடிகளுக்கும் மேல் வியாபாரம் ஆனதும் ஒருகாரணம்.

எப்போது வந்தாலும் படம் மரண மாஸ் ஆக இருக்கும் என மாஸ்டர் பட குழுவினர் அறிவித்துள்ளதால் அந்த படம் வெளியாகும்போது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்பது மட்டும் உறுதி.

இந்நிலையில் விஜய் தளபதி65 சன் பிக்சர்ஸ் நிறுவனம், தளபதி66 தேனாண்டாள் நிறுவனம், தளபதி67, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் என ஏற்கனவே தனது அடுத்தப்பட தயாரிப்பாளர்களை முடிவு செய்து வைத்துள்ளார்.

இதற்கிடையில் தளபதி விஜய்யை வைத்து 4 வருடங்களுக்கு முன்னர் சூப்பர் ஹிட் படமான தெறி படத்தை கொடுத்த கலைப்புலி எஸ் தாணு மீண்டும் அவருடன் ஒரு படம் தயாரிக்க ஆசைப்படுகிறாராம்.

மாஸ்டர் படத்தின் போதே இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும், சன் பிக்சர்ஸ் வருவதற்கு முன்னரே அந்த தயாரிப்பாளருக்கு விஜய் ஓகே சொல்லியதாகவும் டூரிங் டாக்கீஸ் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

தாணு சூர்யா படத்திற்கு பின்னர் மீண்டும் வெற்றிமாறன் மற்றும் விஜய் இணையும் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தாணு இடையில் வந்ததால் மாஸ்டர் பட தயாரிப்பாளருக்கு மீண்டும் விஜய் பண்ண வேண்டிய (தளபதி67) படம் தள்ளிச் செல்ல வாய்ப்பு உள்ளதாம். இதனால் லலித்குமார் சிறிது அப்செட்டாக இருக்கிறாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top