இளையதளபதி விஜய்யுடன் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.. பிரபல நடிகையின் மகனாச்சே!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பேராதரவால் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகின்றனர்.  கொரோனா  ஊரடங்கு காலத்தில் அனைத்து நடிகர்களும் படத்தை வெளியிட தயங்கும் நேரத்தில் தைரியமாக மாஸ்டர் படத்தை வெளியிட்டார்.

இப்படம் கோடிக்கணக்கில் வசூல் பெற அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களும் தைரியமாக திரையரங்குகளில் படத்தை வெளியிட முன் வந்தனர். நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் தாண்டி பல பிரபலங்களின் குழந்தைகளும் ரசிகர்களாக உள்ளனர். அதாவது நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடே இல்லை என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவிற்கு ஏகப்பட்ட ரசிகர்களை வைத்துள்ளார் நடிகர் விஜய் 6 வயதில் இருந்து 60 வயது வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொண்டுள்ளார். சமீபகாலமாக விஜயுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் 2 குழந்தைகள் கையில் வைத்தபடி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

vijay sri hari
vijay sri hari

தற்போது அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது அந்த குழந்தையில் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம்  ரசிகர்கள் தெரியக்கூடிய  நடிகையாக பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவரது வீட்டு விசேஷத்திற்கு நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார்.

அப்போதுதான் வனிதாவின் மகன் ஸ்ரீஹரியை விஜய்  தூக்கி வைத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம்தான் விஜய் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்