விஜய் படத்தின் ஹீரோயின் இவரா ?

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் படத்தின் ஷூட்டிங் ஜனவரியில் நடை பெரும் என்று சொல்லப்படுகிறது. கிரிஸ் கங்காதரனை ஒளிப்பதிவாளராக முடிவு செய்துள்ளாராம் முருகதாஸ். இவர் மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரிஸ், சோலோ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.

Vijay-ARMurugadossஇசை பிரெஷாக இருக்க வேண்டும் என்பதற்க்காக விஜய் படங்களில் பணியாற்றாத ஒருவரை இசையமைப்பாளராக ஃபிக்ஸ் பண்ணவேண்டும் என்று முடிவுசெய்துள்ளார்களாம். அதனால் இசையமைப்பாளர் தேடல் தெடர்ந்து நடைபெறுகிறது.

Sushant Sing & Kira Advani

படத்தின் ஹீரோயின் யார் என்ற சஸ்பென்ஸ் இன்றளவும் தொடர்ந்து கொண்டே வருகிறது. எம்.எஸ்.தோனி. ‘தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் நடித்த கிரா அத்வானி ஹீரோயினாக புக் செய்யப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கிசு கிசுக்கப்படுகிறது.

Now I know where I get the poses from??‍?‍? #PoserParents #throwbackthursday

A post shared by KIARA (@kiaraaliaadvani) on

மாமியார் படத்தில் மருமகன்

கல்பனா ஹவுஸ் சுஜாதா விஜயகுமார், என்றால் சின்னத்திரை யில் மிக பிரபலம். சீரியல் தயாரிப்பாளர். ராதிகாவுடன் சேர்ந்து டப்பிங் சிரியல்களுக்குக்கு எதிராக குரல் கொடுத்தவர். இவர் தற்பொழுது சினிமா தயாரிப்பிலும் இறங்குகிறார். இவரின் மகளான ஆர்த்தியை தான் நம் ஜெயம் ரவி திருமணம் செய்துள்ளார். இப்படத்தின் ஹீரோவாக நடிக்கப்போவது வேற யாரும் இல்லை மருமகன் ஜெயம் ரவி தான்.

அதிகம் படித்தவை:  "ஜாலிக்காக குடிக்க ஆரம்பிச்சேன் ! இப்பெல்லாம் குடிச்சா தான் ஜாலியே" க்ரைம் திரில்லர் வீரா ஸ்னீக்- பீக் !
Jayam Ravi & Aarti Raviமருமகன் ஜெயம் ரவி தான் ஹீரோ .

ஏற்கெனவே கமிட் ஆகியிருந்த ‘சங்கமித்ரா’ தள்ளிப்போனதால் அந்த கால்ஷீட்டை இவர்களுக்குத் தந்திருக்கிறார் ஜெயம் ரவி . ஹீரோயின் உள்பட மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களின் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படத்தின் இயக்குனர் யார் என்ற அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

அதிகம் படித்தவை:  Metro Official Trailer

பிஸியாக இருக்கும் ஹீரோ பிரபுதேவா

பிரபுதேவா ஹிந்தியில் டிமாண்ட் அதிகம் உள்ள டைரக்டர். இயக்குனராக வளம் வந்த பிரபுதேவா நீண்ட இடைவெளிக்கு பின் ஏ.ல்.விஜய் இயக்கத்தில் தேவி படத்தில் நடித்தார். படமும் சூப்பர் ஹிட். சல்மார் பாடல் முரட்டு ஹிட். இந்தப்படத்திற்கு பிறகு இயக்கத்தை தள்ளிவைத்துவிட்டு முழுநேர மாக நடிப்பில் இறங்கினார் பிரபுதேவா.

Actor Prabhu Deva and Director Thangar Bachan in Kalavaadiya Pozhuthugal Movie Stills

ஹிந்தியில் காமாஷி என்ற படத்திலும், தமிழில் ‘யங் மங் சங்’, ‘மெர்க்குரி’, ‘குலேபகாவலி’, ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களில் மனிதர் ஏக பிஸி. இந்நிலையில் டான்ஸ் மாஸ்டராக இருந்து இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோவான ஹரிகுமார் நடித்து இயக்கம் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிரபுதேவா. ஹீரோ பிரபுதேவா கலக்குங்க தலைவா, உங்க டான்ஸுக்கு நாங்க அடிமை.