ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

வெண்பாவுக்கு மாப்பிள்ளையாக வந்த விஜய் டிவி ஹீரோ.. இப்படியே கதை உருட்டும் இயக்குனர்

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் ரசிகர்களின் பேவரைட் தொடரான பாரதிகண்ணம்மா இப்போது எப்போ முடியும் என்ற விரக்தியில் உள்ளனர். ஏனென்றால் இத்தொடரின் கதாநாயகி ரோஷினி விலகிய பிறகு சீரியலின் டிஆர்பி இறங்கியது.

மேலும் ஆரம்பத்தில் மாஸாக இருந்த வெண்பாவை தற்போது காமெடிபீஸ் ஆக மாற்றி உள்ளனர். வெண்பாவின் அம்மாவாக அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் ஷர்மிளா தற்போது வெண்பாவிற்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார். பார்க்கும் மாப்பிள்ளை எல்லாம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி விரட்டிவிடுகிறார்கள் வெண்பா.

சமீபத்தில் நம்ம வீட்டு பொண்ணு கதாநாயகன் வெண்பாவை பெண் பார்க்க வந்திருந்தார். ஆனால் அவரையும் ஓட ஓட விரட்டி அடித்தார் வெண்பா. இந்நிலையில் தற்போது மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் வேலைக்காரன் தொடரின் ஹீரோ சபரிநாதன்.

அதாவது முதலில் ரவுடிகள் வெண்பாவை கடத்த முயற்சிக்கின்றனர். அப்போது சபரி என்ட்ரி கொடுத்து வெண்பாவை காப்பாற்றுகிறார். உடனே தனது அட்ரஸை கொடுத்த சபரியை வீட்டுக்கு அழைக்கிறார். மேலும் வீட்டுக்கு வந்த சபரியை தனது அம்மாவிடம் வெண்பா அறிமுகம் செய்கிறார்.

ஆனால் இது எல்லாமே ஷர்மிளாவின் பிளான்தான். மிஸ்டர் ரோகித் தான் நான் உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்ன சர்மிளா கூற வெண்பா அதிர்ச்சியடைகிறார். ஆனால் ஒருவழியாக பாரதிகண்ணம்மா தொடர் முடியும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது இத்தொடரில் புதுப்புது என்ட்ரியால் அதே கதையை இயக்குனர் மீண்டும் உருட்டி வருகிறார். இதனால் இத்தொடரை இப்போது முடிக்கும் எண்ணம் இயக்குனருக்கு இல்லை என ரசிகர்கள் திட்டி தீர்த்த வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News