புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய் பட இயக்குனரை நம்பி மோசம் போன வாரிசு.. மனவேதனையில் தவித்து வாடும் அப்பா நடிகர்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதை சீக்கிரத்தில் முடித்துவிட்டு அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்கில் வெளியிடுவதற்கு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதனால் படப்பிடிப்பு வேலைகள் படுஜோராக உருவாகி வருகிறது.

அடுத்ததாக இப்படத்தை முடித்த கையோடு தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இவர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி அவருக்கு ஒரு வாழ்நாள் வெற்றியை தேடி கொடுத்தார். அத்துடன் மாநாடு படத்தின் மூலம் சிம்பு மற்றும் வெங்கட் பிரபுவுக்கு சினிமா கேரியரை தூக்கி விடும் அளவிற்கு எங்கேயோ கொண்டு போய்விட்டது.

Also read: அஜித்தின் அந்த படம் மாதிரி சஸ்பென்ஸ், திரில்லர் வேணும்.. விஜய் கண்டிஷனுக்கு தலையாட்டிய வெங்கட் பிரபு

இதனால் இந்த இயக்குனர் வெற்றி இயக்குனர் தான் என்ற நம்பிக்கையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுன் வெங்கட் பிரபுவை சந்தித்து பாராட்டி இருக்கிறார். அத்துடன் இவருடைய மகன் நாக சைதன்யாவை வைத்து ஒரு படம் பண்ணுமாறு கேட்டுக் கொண்டார். அவரும் அந்த நேரத்தில் ஒரு கதையை தயார் செய்து வைத்திருந்ததால் உடனே படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் சுமூகமாக ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படி வெங்கட் பிரபுவிடம் கேட்டு அவர் இயக்கி நாக சைதன்யா நடித்த படம் தான் கஸ்டடி. ஆனால் இந்த படம் வெளியாகிய நிலையில் படுமோசமான தோல்வி அடைந்துள்ளது. வெங்கட் பிரபுவை நம்பினதற்கு கடைசியில் நாகார்ஜுன் மோசம் போனதா மிச்சம். அதனாலேயே தற்போது தமிழ் இயக்குனர்களை பார்த்து தெறித்து ஓடுகிறார். வெங்கட் பிரபு கடைசியாக இயக்கிய மாநாடு படத்தை பார்த்து மிகவும் ஏமாற்றம் அடைந்து விட்டார்.

Also read: பிச்சைக்காரனா இல்ல மொக்கைக்காரனா.? அனல் பறக்கும் விஜய் ஆண்டனி பட ட்விட்டர் விமர்சனம்

தற்போது வரை வெங்கட் பிரபுவால் மன வேதனையில் தவித்து வருகிறார் நாகார்ஜூன். அப்பா சொல்வது கரெக்ட்டா தான் இருக்கும் என்று நாக சைதன்யாவும் மோசம் போய்விட்டார். இந்த நிலைமையில் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைக்கிறார் விஜய். இவருடைய நிலைமை என்னவாக இருக்கும் என்றுதான் ரசிகர்கள் மிகவும் வாடி வருகிறார்கள்.

ஆனாலும் சில ரசிகர்கள் இவர்கள் கூட்டணி வைப்பதை கேட்டு அஜித்துக்கு மங்காத்தா படம் மாதிரி விஜய்க்கு தரமான படத்தை கொடுப்பார் என்று மிகவும் நம்பிக்கையாக பேசி வருகிறார்கள். மேலும் தளபதி 68 படத்தை குறித்து ஒவ்வொரு அப்டேட்டுகளும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி கலக்கிக் கொண்டு வருகிறது. பார்க்கலாம் இவர்கள் கூட்டணி எந்த மாதிரியான வெற்றியை கொடுக்கப் போகிறது என்று.

Also read: அடுத்த வாட்டி வரும்போது குடிக்காம வாங்க.. ராதாரவியை அவமானப்படுத்திய விஜய்யின் போன் கால்

- Advertisement -

Trending News