அட்லீ இயக்கத்தையும் தாண்டி தற்போது தன்னுடைய புது நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் ஜீவா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்திருக்கிறார் அட்லீ. அண்மையில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அட்லீ பேசும்போது, எனக்கு ஸ்ரீதிவ்யாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அதனால் அவரை என்னுடைய படத்தில் நடிக்க கேட்டேன். ஆனால் அவர் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டார் என்றார்.

அதிகம் படித்தவை:  தல அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இசையமைப்பது பற்றி மனம் திறந்த டி .இமான் !

ஆனால் எந்த படத்தில் கால்ஷீட் பிரச்சனையால் ஸ்ரீதிவ்யா நடிக்கவில்லை என்பதை அட்லீ கூறவில்லை. ஸ்ரீதிவ்யா தரப்பில் கேட்டபோது, விஜய்யின் 61வது படத்தில் வயதான விஜய்க்கு ஜோடியாக நடிக்கயிருந்த ஜோதிகா கடைசி நேரத்தில் விலகியதை தொடர்ந்து அட்லீ பல நாயகிகளிடம் கேட்டாராம், அதில் ஒன்று ஸ்ரீதிவ்யா என்று கூறப்படுகிறது.