fbpx
Connect with us

Cinemapettai

கிரீடம் மற்றும் தலைவா பட இயக்குனரின் இரண்டாவது திருமணம்.! மணப்பெண் யார் தெரியுமா ?

a l vijay amala paul

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கிரீடம் மற்றும் தலைவா பட இயக்குனரின் இரண்டாவது திருமணம்.! மணப்பெண் யார் தெரியுமா ?

அமலாபாலை விவாகரத்து செய்துவிட்டு டாக்டர் பெண்ணை திருமணம் செய்ய இருக்கும் இயக்குனர் விஜய்.

அஜித் குமார் நடித்த கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய். அதன் பிறகு மதராசபட்டினம், தெய்வ திருமகள், தலைவா, சைவம், தேவி உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். ஆனால் தெய்வ திருமகள் மற்றும் தலைவா படத்தில் அமலாபால் நடித்து இருந்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட காதல் பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

பின்பு இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு அமலாபால் படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தினர். விஜய் படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் விஜய்யின் பெற்றோர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதால் தற்போது பெற்றோரின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.

மேலும் இவர் கல்யாணம் செய்ய உள்ள பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா. இவர் சென்னை மண்ணிவாக்கதை சேர்ந்த ராஜன் பாபு மற்றும் அனிதா தம்பதியின் மகள் என தெரிவித்துள்ளனர். இவர் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற டாக்டர் எனவும் தற்போது பொது நல மருத்துவராக பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஜூலை 11ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கான வேலைகளில் இருவீட்டாரும் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top