ரஜினி, அஜித்தை ஓரங்கட்டிய விஜய்.. விஸ்வரூபம் எடுத்த தளபதியின் முக்கியமான முன்னேற்றங்கள்

தற்போது டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினி, அஜித், விஜய் படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக அவர்களது ரசிகர்கள் படத்தை வெற்றி பெறச் செய்துவிடுகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூலை தாண்டிய படங்களை பார்க்கலாம்.

சமீபத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் 2 படம் தமிழ்நாட்டில் அதிக வசூலை பெற்றது. இப்படத்தின் முதல் பாகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நிலையில் கேஜிஎப் 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதேபோல் பாகுபலி 2 படமும் தமிழ்நாட்டில் அதிக வசூலைப் பெற்றிருந்தது.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் என பல பிரபலங்கள் நடித்த இப்படம் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை அடைந்தது. இந்நிலையில் அஜித்தின் 2 படங்கள் 100 கோடி வசூலை தாண்டி உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் படம் வசூலில் வேட்டை ஆடியது.

இதற்கு அடுத்தபடியாக சமீபத்தில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படமும் வணிகரீதியான வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான நான்கு படங்கள் 100 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் படமும், இப்படத்தின் தொடர்ச்சியான 2.o படமும் 100 கோடி வசூலைத் தாண்டியது.

மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் ஈட்டியது.

இந்நிலையில் மற்ற நடிகர்களை காட்டிலும் விஜய்யின் 5 படங்கள் 100 கோடி வசூலைத் தாண்டி உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார், அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் மற்றும் பிகில் தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை தாண்டி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மேலும் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்