இளைய தளபதி விஜய் எப்போதும் நண்பர்களுக்கு மரியாதை கொடுப்பவர். படப்பிடிப்பில் அமைதியாக இருந்தாலும், தன் நண்பர்கள் மத்தியில் செம்ம கலகலப்பாக இருப்பார்.

இவர் நடிப்பில் வெளிவந்த புதிய கீதை படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும், பலருக்கும் பிடித்த படம் தான்.

இதில் விஜய்யின் நண்பராக சஞ்சீவ் நடித்திருப்பார், சஞ்சீவ் படத்தில் மட்டுமில்லை விஜய்யின் நிஜ வாழ்க்கையிலும் நெருங்கிய நண்பர் தான்.

இதனாலேயே, விஜய் பல படங்களில் சஞ்சீவை தன்னுடன் நடிக்க வைத்தார், இதுமட்டுமின்றி விஜய்க்கு என சில நண்பர்கள் வட்டம் உள்ளது.

விஜய்யின் படங்களில் ப்ரண்ட்ஸ் கேங் ஒன்று வரும், அதை கவணித்தால் உங்களுக்கே தெரியும், ஒரு சிலர் தொடர்ந்து விஜய் படங்களில் அவருடைய நண்பர்களாக நடித்திருப்பார்கள்.