தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளி அன்று மிக பிரம்மாண்டமாக ரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் வெளியானது. படம் வெளிவருவதற்கு முன்பும் பின்பும் பல தடைகளை சந்தித்து வருகிறது.

லண்டன் டிவி தொகுப்பாளினியும், இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் பெண்ணுமான ஷனா மகேந்திரன் என்பவர் மெர்சல் படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

mersal

மெர்சல் படத்தின் ஆரம்பத்திலேயே விஜய் பிரான்ஸ் நாட்டில் வந்து இறங்கியவுடன், அவரை பிரான்ஸ் போலிஸார் சந்தேகத்துடன் பார்ப்பார்கள்.உடனே அவரின் உடையை அவிழ்த்து பரிசோதனை செய்வார்கள். பிறகு விஜய் டாக்டர் என்பதை தெரிந்துக்கொண்டு விட்டுவிடுவார்கள்.

அப்போது ஒரு இலங்கை பெண் ‘அண்ணா மன்னித்து விடுங்கள்…அவர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன், உங்கள் உடையை பார்த்து அவர்கள் அப்படி நினைத்திருப்பார்கள்’ என்று ஆறுதல் கூறுவார்.

mersal

உடனே விஜய் ‘பரவாயில்லம்மா, கமல் சார், கலாம் சாருக்கே இதெல்லாம் நடக்கும் போது நாமெல்லாம் யார்?’ என்று சொல்வார். இந்த காட்சியில் இலங்கை பெண்ணாக நடித்தது வேறு யாருமில்லை, இலங்கையில் வெளிவந்த மண் படத்தின் நாயகி ஷனா மகேந்திரன். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

மட்டக்களப்பை சேர்ந்தவர் ஷனா மகேந்திரன். இவர் ஷனா மகேந்திரன் ஷோ என்ற நிகழ்ச்சியை இவர் லண்டன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்குகிறார். பிரபலங்களை பேட்டி கண்டு வெளியிட்டு வருகிறார்.

mersal

மண் திரைப்படத்தில் நடித்து சிறந்த விருதை பெற்றுள்ளார். மெர்சல் படத்தில் இவர் ஒரு காட்சியில் வந்து சென்றாலும், அந்த காட்சி வசனங்கள் மிகவும் வலுவாக இருந்ததால் எல்லோர் மத்தியிலும் மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.