விஜய்யின் 61வது பட ஃபஸ்ட் லுக் வரும் ஜுன் 22ம் தேதி அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. இப்போதே அந்த நாளை நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு நடுவில் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல் காத்துக் கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், தெறி படத்தின் ஆடியோ உரிமையை பெற்றிருக்கும் Think Music அப்படத்தின் Original Soundtrack (OST) வெளியிட முடிவு செய்துள்ளனராம்.

அட்லீ இயக்கியிருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய் பிறந்தநாள் முன்பே இப்படி ஒரு ஸ்பெஷல் விஷயம் நடக்க இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.