மின்சாரக்கண்ணா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேந்திரன் விஜய் மீது வேண்டும் என்றே முட்டையை அடித்ததாக சுவாரசிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

vijay
vijay

விஜய் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளிவந்த படம் மின்சாரக்கண்ணா. இப்படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். குஷ்பு, ரம்பா, மோனிக்கா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜயின் தம்பியாக மாஸ்டர் மகேந்திரன் நடித்து இருந்தார். விஜயின் திரை வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இது என்பதால் இன்றும் இப்படத்திற்கு வரவேற்பு நிலவி வருகிறது.

இப்படத்தில் நடித்த மகேந்திரன் தற்போது நடிகராகவும் சில படங்களில் நடித்து இருக்கிறார். 3 வயதில் நடிக்க தொடங்கிய அவர், தற்போது வரை 6 மொழிகளில் 138 படங்களில் நடித்து இருக்கிறார். இதுவரை குழந்தை நட்சத்திரத்திற்காக குழந்தை நட்சத்திரமா 5 மாநில விருது, தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், அசிஸ்ட் வேல்ட் ரெகார்ட்ஸ் ஆகிய சாதனைகளை செய்து இருக்கிறார். ‘ரங்க ராட்டினம்’, ’இதுக்குதான் நான் அப்போவே சொன்னேன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனர் இயக்கத்தில் ’நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ எனப் பெயரிடப்பட்டுள்ள படம் மற்றும் ‘சாவி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

vijay
vijay

இந்நிலையில், சமீபத்தில் மகேந்திரன் அளித்த பேட்டியில் மீண்டும் யாருடன் நடிக்க வேண்டும் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் விஜயுடன் எனத் தெரிவித்து இருக்கிறார். இதற்கு காரணம் தெரிவித்த அவர், மின்சார கண்ணா படத்தில் தளபதி செய்யும் சேட்டைகளை பார்த்து இருக்கிறேன். அப்படத்தில், சமையல் அறையில் இருக்கும் பொருள்களை எடுத்து அடித்துக்கொள்ளும் காட்சி இருக்கும். அதை ரவிக்குமார் சார் ரியலாக எடுக்க உண்மையிலேயே எடுத்து அடிக்க சொன்னார். நானும் கையில் கிடைத்த முட்டைகளை விஜய் அண்ணா மீது போட்டேன். அக்காட்சி ஷூட்டிங் முடிந்ததும், நீ வேண்டும் என்றே தானே என் மீது போட்டாய் என்று ஜாலியாக கேட்டார். அப்போதே அவர் பிரபல நடிகர் இதை சாதாரணமாக கடந்து சென்றது ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்தார்.