Tamil Nadu | தமிழ் நாடு
மீண்டும் குடைச்சல் கொடுக்கும் வருமான வரித்துறை.. தளபதிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த எம்பி
கடந்த வாரம் தளபதி விஜய்யிடம் வருமானவரி சோதனை நடைபெற்று அதில் எந்த ஒரு பணமும் சிக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர். அந்த வகையில் மீண்டும் வருமான வரித்துறையினர் தளபதி விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளனர். தளபதிக்கு மட்டுமல்லாமல் ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு மூன்று நாட்கள் கெடு கொடுத்த நிலையில் தற்போது உடனடியாக சென்னையில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் விஜய் தரப்பிலிருந்து அவகாசம் கேட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதற்கிடையில் எம்.பி தயாநிதிமாறன் நாடாளுமன்றத்தில் தளபதி விஜய்க்காக குரல் கொடுத்துள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வருமான வரி சலுகை அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் தளபதி விஜய்யை குறிவைத்து வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் தொழில்ரீதியாக ஒரு உள்நோக்கமும் இருப்பதாக யோசித்தாலும் தற்போது ரஜினியும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு சீமான், அமீர் போன்ற பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. இதில் ஒரு சுவாரசியமான சம்பவம் என்னவென்றால் தளபதிக்கு சீமான் குரல் கொடுத்திருப்பார். மறுநாள் அவர் தஞ்சாவூர் கோவில் சென்று தரிசனம் செய்துள்ளார்.
உடனே அவரது முன்னாள் காதலி என்று சொல்லிக்கொள்ளும் விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிடுகிறார், அதில் சீமானை தரக்குறைவாக பேசியுள்ளார். இதன்மூலம் என்ன தெரிகிறது என்றால் தளபதிக்கு குரல் கொடுத்ததால் இந்த வீடியோ மூலம் மிரட்டப்படுகிறார்கள் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
