Connect with us

Cinemapettai

விஜய் நடித்த வேட்டைக்காரன் பட டைரக்டரின் தற்போதைய நிலைமை.. இது ரொம்ப கொடுமை

vettaikaran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் நடித்த வேட்டைக்காரன் பட டைரக்டரின் தற்போதைய நிலைமை.. இது ரொம்ப கொடுமை

தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்ட் பழைய ஹிட் அடித்த படங்களின் தேதிகளை ஞாபகப்படுத்தி அதைக் கொண்டாடுவது தான். அந்த வகையில் தளபதி விஜய்யின் கேரியரில் பக்கா கமர்ஷியல் படமாக வெளிவந்து குடும்ப ரசிகர்களைக் கவர்ந்த திரைப்படம் வேட்டைக்காரன். வேட்டைக்காரன் படம் வெளியாகி 10 வருடம் ஆனதை அவரது ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் குடும்ப ரசிகர்களின் ஆதரவில் படம் சக்கை போடு போட்டது. படத்தின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்னரே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. முதன்முறையாக விஜய்க்கு இசை அமைத்தார் விஜய் ஆண்டனி.

படத்தில் வெளியான புலி உறுமுது, கரிகாலன், என் உச்சி மண்டை என ஒவ்வொரு பாடலும் தாளம் போட வைத்தன. மேலும் படத்தின் பஞ்ச் டயலாக்குகள் மற்றும் சண்டைக் காட்சிகள் பெருமளவு ரசிகர்களை கவர்ந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக அனுஷ்காவின் நடிப்பு அதன்பிறகு எந்த சினிமாக்களில் பார்க்க முடியாத அளவுக்கு சூப்பராக இருந்தது. ஆரடி ஆப்பிள் போல் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்தார்.
இந்த படத்தை எழுதி இயக்கியவர் ஒரு பாபுசிவன்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என அந்த சமயத்தில் பல பேச்சுகள் எழுந்தன. அவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி சீரியலை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top