fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வாத்தி பாடலுக்கு போட்டது விஜய் ஸ்டெப் இல்லையாம்.. இந்த நடிகர் ஆடுனதாம்.. அம்மணி ட்வீட் போட்டாங்க

vijay-master

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாத்தி பாடலுக்கு போட்டது விஜய் ஸ்டெப் இல்லையாம்.. இந்த நடிகர் ஆடுனதாம்.. அம்மணி ட்வீட் போட்டாங்க

தளபதி விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன்முறையாக உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏப்ரல் 9ஆம் தேதி பட வெளியீட்டை முடிவு செய்து மார்ச் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தி முடித்தனர். பின்னர் கொரானா பிரச்சனையால் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

அனிருத் இசையில் உருவாகிய அனைத்து பாடல்களும் இணையதளங்களில் பெரிய ஹிட் அடித்துள்ளது. மேலும் ரசிகர்களின் வரவேற்பை ஏகபோகமாக பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் ஒத்து பாடல் உலக ட்ரெண்டிங்கில் உள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் இந்த பாடலுக்கு தளபதி விஜய் நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது. அப்போது விஜய்யுடன் சாந்தனுவும் அனிருத்தும் சேர்ந்து ஆடினார்கள். அந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது.

இந்நிலையில் சாந்தனு போட்ட ஸ்டெப் விஜய் ஆடியதால் உலகமே தற்போது அதே ஸ்டெப்பை ஆடுகிறது என பூரித்துப் போய் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் கீர்த்தி. இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

kiki-status

kiki-status

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top