fbpx
Connect with us

Cinemapettai

தெறி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் நடிகர்.. என் படத்துக்கே காப்பியா.. ஆனந்த கண்ணீரில் அட்லீ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தெறி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் நடிகர்.. என் படத்துக்கே காப்பியா.. ஆனந்த கண்ணீரில் அட்லீ

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகிய தெறி படம் விஜய்யின் சினிமா மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உலகமெங்கும் மெகா ஹிட்டடித்தது.

அட்லீ, விஜய் முதன் முதலில் இணைந்து உருவாக்கிய தெறி படம் மாஸ் வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. ஆனால் தெறி படம் வெளியாகும்போது மணிரத்னம் இயக்கிய சத்ரியன் படத்தை போலவே உள்ளது என பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதுமட்டுமில்லாமல் அட்லீ மீது கதை திருடர் என்ற முத்திரை குத்தப்பட்டது. அட்லீ முதன் முதலில் இயக்கிய ராஜாராணி படம் கூட மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்தின் சாயல் தான் எனவும் தெரியவந்தது.

இப்படியே போனால் வேலைக்காகாது என மணிரத்னம் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் உஷாராகி தெறி படத்தின் ரீமேக் உரிமைக்கு காசு கேட்டதெல்லாம் வன்முறையின் உச்சக் கட்டம்.

அப்படி பல சர்ச்சைகளில் மாட்டிக்கொண்ட தெறி படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. ஏற்கனவே இந்த கதையில் பல நடிகர்கள் நடிக்க இருந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளாராம்.

சமீபகாலமாக தோல்விகளை கொடுத்துக்கொண்டிருக்கும் வருண் தவான் தெறி படம் பார்த்து பிடித்து போக உடனடியாக ஹிந்திக்கு ஏற்றபடி கதையை மாற்றி அமைக்கும் வேலைகளில் இறங்கிவிட்டாராம். ஆனால் கண்டிப்பாக இயக்குனர் அட்லீ இல்லை என்பது மட்டும் உறுதியாம்.

கேட்டால், அட்லீ சாருக்கான் படத்தை இயக்க உள்ளதால் இந்த படத்தை தவிர்த்து விட்டார் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் உண்மையில் பட்ஜெட்டுக்கு பயந்து ஓரங்கட்டி விட்டனர் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top