Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் படமே வெளிவரல, ஆனா அதுக்குள்ள தளபதி67 படத்துக்கு டைரக்டர் ரெடி.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் விஜய்
தளபதி விஜய் தற்போது நிலவியுள்ள சூழ்நிலை காரணமாக எப்போது படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டாலும் உடனடியாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ரெடியாக வைத்து உள்ளார் என்ற செய்தி தான் கோடம்பாக்கத்தை ஆட்டிப் படைத்துள்ளது.
தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தளபதி64 படமாக உருவாகி இருந்த திரைப்படம் மாஸ்டர். இந்த படம் வருகிற தீபாவளி அல்லது பொங்கலுக்கு உறுதியாக வெளியாகும் என தயாரிப்பாளர் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் தளபதி65 படத்திற்கு முருகதாஸை இயக்குனராக தேர்வு செய்தார் விஜய். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கயிருந்தது. ஆனால் அதில் தற்போது சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அடுத்ததாக மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக தளபதி66 படத்தை ஒதுக்கி வைத்துள்ளார் விஜய். அந்த படத்தை பெரும்பாலும் மகிழ்திருமேனி அல்லது சிறுத்தை சிவா இயக்க வாய்ப்புள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
இந்நிலையில் தளபதி67 படத்திற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் முடிவு செய்துவிட்டாராம் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்குமாருக்கு மீண்டும் ஒரு படம் பண்ணித்தர முடிவு செய்துள்ளார் விஜய்.
அந்த படத்திற்கு பெரும்பாலும் இயக்குனர் பாண்டியராஜ் உருவாக்கி வைத்துள்ள கிராமத்து சப்ஜெக்ட் ஓகே. தளபதி65 படமே அவர்தான் பண்ண வேண்டிய நிலையில் முருகதாஸ் உள்ள புகுந்து ஆட்டையைப் குழப்பியதால் தளபதி67 செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை சினிமா விகடன் நண்பர்கள் அவர்களின் யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
