
விஜய் தற்போது தளபதி 65 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வரும் தளபதி 65 படத்தை நெல்சன் என்பவர் இயக்கி வருகிறார்.
அனிருத் இசையமைக்கும் தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் சென்னையில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது. இதற்கான வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தளபதி 66 படத்தைப் பற்றிய வதந்திகள் நாளுக்கு நாள் அளவுக்கதிகமாக வந்து கொண்டே இருக்கின்றன. முன்னதாக தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வந்தது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் அட்லீ கூட்டணியில் உருவாக உள்ளது எனவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது வரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அதேபோல் தளபதி 66 படத்தை முன்னதாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வந்தது.
ஆனால் தற்போது விஜய் தன்னுடைய சினிமா மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறாராம். இதனால் தளபதி 66 படத்தை தெலுங்கு நிறுவனம் ஒன்று நேரடியாக தயாரிக்க உள்ளதாகவும், அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்க உள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.
கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தின் இயக்குனரான வம்சி பைடிபல்லி என்பவர் விஜய்யின் தளபதி 66 படத்தை இயக்க உள்ளாராம். இவர் மகேஷ்பாபுவுக்கு மகரிஷி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
