Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீங்கதான் தளபதி 66 இசையமைப்பாளர்.. சத்தியம் செய்து கொடுத்த விஜய், தெறிக்கப்போகும் புதிய கூட்டணி

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

கத்தி, மாஸ்டர் படங்களுக்கு பிறகு அனிருத் மூன்றாவது முறையாக தளபதி விஜய்யுடன் இணைந்து தளபதி 65 படத்தில் பணியாற்ற உள்ளார். முதலில் தளபதி 65 படத்தில் இயக்குனராக ஏஆர் முருகதாஸ் மற்றும் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

ஆனால் விஜய் எதிர்பார்த்த அளவுக்கு முருகதாஸின் கதை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இதன் காரணமாக முருகதாஸை கழட்டிவிட்டு நெல்சனுடன் கூட்டு சேர்ந்தார் விஜய். அதேபோல் விஜய் படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்ற தமன் கனவும் மூழ்கிப் போனது.

தளபதி 65 படத்திற்காக ஏற்கனவே தமன் ஒரு பாடலை உருவாக்கிய கொடுத்ததாகவும் அது விஜய்யை மிகவும் கவர்ந்ததாகவும் தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில் விஜய் சமீபத்தில் இசையமைப்பாளர் தமனை தொடர்பு கொண்டுள்ளார்.

அதில் தளபதி 65 படத்தில் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை என மன்னிப்பு கேட்டதாகவும், தளபதி 66 படத்தில் யார் என்ன சொன்னாலும் நீங்கள் யார் இசையமைப்பாளர் என உறுதி கொடுத்ததாகவும் தமன் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

thalapathy66-thaman

thalapathy66-thaman

இதனால் இரட்டை சந்தோஷத்தில் இருக்கும் தமன் விஜய்யுடன் இணையும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறாராம். தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தமன் தமிழிலும் தனக்கான ஒரு இடத்தை நீண்ட காலமாக தேடிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாக தளபதி 66 படத்தின் மூலம் தமன் கனவு நிறைவேறும் என நம்பலாம்.

Continue Reading
To Top