Connect with us

Cinemapettai

பிக்பாஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த விஜய்.. தளபதி66 இயக்குனர் மகிழ் திருமேனி இல்லையாம், இவர்தானாம்!

vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த விஜய்.. தளபதி66 இயக்குனர் மகிழ் திருமேனி இல்லையாம், இவர்தானாம்!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு காத்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இதனைத் தொடர்ந்து தளபதி65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.

அதே சமயத்தில் தளபதி 65 படம் முடிந்த உடனேயே எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் தளபதி66 படத்தில் நடிக்க முடிவு எடுத்துள்ளாராம் தளபதி விஜய். அந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை வழங்கி கொண்டிருக்கும் நிறுவனமும் இணைந்து அந்த படத்தை தயாரிக்க உள்ளனர். அதுமட்டுமில்லாமல் தேனாண்டாள் பிலிம்ஸ் தேர்வு செய்து வைத்திருந்த மகிழ்திருமேனி வேண்டாம் என்று கூறிவிட்டதாம் அந்த நிறுவனம்.

தற்போது தளபதி66 படத்தை ஈரம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இவரும் மகிழ்திருமேனிக்கு கொஞ்சமும் சளைத்தவர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருப்பது விஜய் மகிழ்திருமேனி கூட்டணி தான். அதுமட்டுமல்லாமல் விஜய் தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் படங்களிலேயே நடித்து வருகிறார்.

தேனாண்டாள் நிறுவனம் தற்போது பொருளாதார ரீதியாக பெரும் சிக்கலில் இருப்பதால் பிக்பாஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்ததாக தெரிகிறது. இந்த செய்தியையும் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார். இந்தக் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களின் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top