Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி66 படத்திற்கு அஜித் பட இயக்குனரை வளைத்து போட்ட விஜய்.. இதுவல்லவா ராஜதந்திரம்!
தல அஜித் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனரை தளபதி விஜய் தன்னுடைய அடுத்த பட இயக்குனராக தேர்வு செய்துள்ளது கோலிவுட் வட்டாரங்களை அதிர வைத்துள்ளது.
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் உள்ள நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்திய மார்க்கெட் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விஜய்யின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு பிகில் படத்தின் வசூல் தான் சாட்சி.
இந்நிலையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் படத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அதேசமயம் மீண்டும் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க உள்ளார்.

vijay-66-cinemapettai
இந்த படத்திற்கு முதலில் மகிழ்திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அதிரடி மாற்றமாக தல அஜித்துக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சிறுத்தை சிவாவை தேர்வு செய்துள்ளாராம்.
இது விஜய் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் விஸ்வாசம் படத்தை சீரியல் போன்று இருக்கிறது என கிண்டல் செய்தவர்கள் அவர்கள் தானே.
