தெலுங்கு இயக்குனர் வேண்டாம்.. தளபதி 66-க்கு இளம் இயக்குனரை ஓகே செய்த விஜய்

விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் தற்போது சென்னையிலுள்ள கோகுலம் ஸ்டுடியோஸ் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் கூட அதே பகுதியில் தோனியின் விளம்பர படப்பிடிப்பு நடந்தபோது விஜய்யும் தோனியும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. தல தளபதி எனக்கூறி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிவடைந்து விட்டதால் தற்போது விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கி விட்டதாக கூறுகின்றனர். அந்த வகையில் முன்னதாக தளபதி 66 படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருந்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அது உறுதி செய்யப்படாத தகவலாகவே இருந்தது. அந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருந்ததாகவும் விஜய்க்கு இந்த படத்தில் 100 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்க இருந்ததாகவும் கூறினர்.

ஆனால் தற்போது தளபதி அறுபத்தி ஆறு படத்திற்காக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி என்பவரை ஓகே செய்து வைத்துள்ளாராம் தளபதி விஜய். இதே தேசிங்கு பெரியசாமிதான் ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக ஒரு தகவல்கள் கோலிவுட்டை வட்டமிடுகின்றன.

அதேபோல் ஏற்கனவே சிவகார்த்திகேயன், அவருக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டதாகவும் கூறுகின்றனர். லோகேஷ் கனகராஜ் மற்றும் வினோத் ஆகியோருக்குப் பிறகு அதிகம் எதிர்பார்க்கப்படும் இளம் இயக்குனராக உருவெடுத்துள்ளார் தேசிங்கு பெரியசாமி.

desingu-periyasamy-cinemapettai
desingu-periyasamy-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்