தளபதி 66 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? முக்கால்வாசி சம்பளத்துக்கே சரியா போச்சு!

விஜய் தற்போது நடித்து வரும் பீஸ்ட் படத்தை பற்றிய பேச்சுக்களும் தகவல்களும் அதிகமாக வெளிவரும் என்று பார்த்தால் அதற்கு மாறாக நடந்து வருவது விஜய் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம்.

எப்போதுமே விஜய்யின் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தின் பாதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே விஜய்யின் அடுத்தடுத்த படங்களை பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கி விடுகின்றன. அந்த படத்தை இயக்குவது யார், தயாரிப்பாளர் யார், பட்ஜெட் எவ்வளவு என காற்றுவாக்கில் செய்திகள் கசிந்து விடுகின்றன.

அந்த வகையில் தற்போது விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தின் பாதி படப்பிடிப்புகளை முடித்து விட்டார். இன்னும் சில மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு பொங்கலை டார்கெட் செய்கிறது பீஸ்ட்.

அதனைத் தொடர்ந்து விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் தளபதி 66 படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதிகாரபூர்வமாக இல்லை என்றாலும் ஆணித்தரமாக கூறுகின்றனர் வலைதளவாசிகள்.

மேலும் தளபதி 66 படத்திற்காக விஜய்க்கு 120 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதோடு படத்தின் இயக்குனரான வம்சிக்கு 12 கோடி சம்பளமாம். படத்தில் எழுத்தாளராக பணியாற்றும் ராஜூமுருகன் என்பவருக்கு 90 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்கிறார்கள்.

இதையெல்லாம் சேர்த்து மொத்தமாக தளபதி 66 படம் சுமார் 180 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாம். இதே பட்ஜெட்தான் விஜய்யின் பிகில் படத்திற்கும் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பிறகு அட்லீயால் 180, 200 ஆனதெல்லாம் வேற கதை.

thalapathy66-cinemapettai
thalapathy66-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்