புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

8 வருடத்திற்கு பிறகு விஜய்யுடன் மல்லுக்கட்டும் ஸ்டைலிஷ் வில்லன்.. தளபதி65 -ல் இணைந்த பிளாக்பஸ்டர் கூட்டணி

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாகி வருகின்றன. அந்த வகையில் விஜய்யின் வெற்றி பட வில்லன் நடிகர் மீண்டும் தளபதி 65 படத்தில் இணைய உள்ளாராம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம்தான் தளபதி 65. சர்கார் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவான வேட்டைக்காரன் மற்றும் சுறா போன்ற படங்களை வாங்கி வெளியிட்டிருந்தாலும் சர்கார் படம் தான் ஒரு முழுநேர விஜய் பட தயாரிப்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அமைந்தது.

இந்நிலையில் மீண்டும் விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் தான் இன்னொரு படத்தை உருவாக்க நினைத்தது சன் பிக்சர்ஸ். ஆனால் முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு திருப்தி இல்லாததால் அவரை நிராகரித்து விட்டார்.

அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் என்பவரை தேர்வு செய்தார் விஜய். தற்போது தளபதி 65 படத்திற்காக நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறதாம். மேலும் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு விஜய் முருகதாஸ் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் மீண்டும் தளபதி 65 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஸ்டைலிஷாக உருவாகும் தளபதி 65 படத்திற்கு சரியான தேர்வுதான் என்கிறார்கள் சன் வட்டாரங்கள்.

vijay-vidhyuth-thalapathy65
vijay-vidhyuth-thalapathy65
- Advertisement -

Trending News