Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி65 அப்டேட் தேதியை முடிவு பண்ணிய சன் பிக்சர்ஸ்.. தெறிக்கவிட தயாராகும் விஜய் ரசிகர்கள்!
மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிக்கப் போவது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான். ஆனால் இன்னமும் அதைப்பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் தான் தளபதி65 படத்தின் ஒப்பந்தங்களில் கையெழுத்திட பட்டதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. ஆனால் அதுபற்றியும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.
மாஸ்டர் படம் ரெடியாகி வெளியீட்டுக்கு தயாராக இருந்த போதிலும் இன்னும் அந்த படத்தின் டிரைலரை வெளியிடாமல் வைத்திருக்கிறார் தளபதி விஜய். அப்படி இருக்கையில் இதை மட்டும் விட்டுவிடுவாரா என்ன.
ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எப்போதுமே ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவது ரொம்ப பிடிக்கும். பிடிக்காத விஷயத்தை கூட திரும்பத் திரும்ப காட்டி பிடிக்க வைத்து விடுவார்கள்.
அந்த வகையில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி65 படத்திற்கான அப்டேட்களை வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
தளபதி விஜய்யும் அதற்கு தலையசைத்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அதே தேதியில் மாஸ்டர் படத்தின் அறிவிப்புகளும் வெளி வர அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.
எப்படியோ, ரசிகர்களுக்கு இந்த விநாயகர் சதுர்த்தி இரட்டை கொண்டாட்டம் தான்.
