Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் பல வருடங்களுக்கு முன்பு ஒதுக்கிய கதையில் விஜய்.. ஓட்ட தக்காளியை வியாபாரம் செய்த முருகதாஸ்!

ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தைப் பற்றிய எந்த தகவலும் வெளிவராத நிலையில் தற்போது அடுத்த படத்திற்கான பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன.

அடுத்ததாக தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி65 படத்தில் விரைவில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் அந்த கதை சென்னையில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் கதை என்பதும் அரசல் புரசலாக தெரிய வந்துள்ளது. இங்கு தான் முருகதாஸ் ஒரு புத்திசாலித்தனமான வேலை செய்துள்ளார்.

சமீபகாலமாக முருகதாஸின் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்வதில்லை. இந்நிலையில் தன்னுடைய பழைய அசிஸ்டென்ட் டைரக்டர்கள் ஆன அஜய் ஞானமுத்து மற்றும் ஆனந்த் சங்கர் ஆகியோர் இருக்கும் போதே தல அஜித்துக்கு ரெட்டை தல என்ற பெயரில் ஒரு கதையை ரெடி செய்து வைத்தாராம்.

தற்போது அதே கதையை தான் தளபதி விஜய்க்கு சொல்லி ஓகே பன்னி உள்ளாராம் முருகதாஸ். என்னை அறிந்தால் படத்திற்கு முன்பு அஜித்துடன் பணியாற்ற இருந்தது கைநழுவி சென்றதால் அந்த கதையை அப்படியே இருந்துள்ளது.

vijay-murugadass-cinemapettai

vijay-murugadass-cinemapettai

தற்போது அதே கதையை தளபதி விஜய்யை வைத்து தளபதி65 என்ற பெயரில் ஆரம்பித்து விட்டாராம். தளபதி65 படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top