Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யின் தளபதி65 படத்தில் எத்தனை பாடல்கள் தெரியுமா? தர லோக்கலாக இருக்க போகுதாம்!
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் வெளியீட்டு தேதியை உறுதி செய்ய முடியாமல் தடுமாறி வருகிறது படக்குழு.
அடுத்ததாக தளபதி65 படத்திற்காக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் செய்து கொடுக்க இருக்கிறார். இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும் அரசல் புரசலாக அனைத்து செய்திகளும் வெளிவந்துவிட்டன.
அதுமட்டுமில்லாமல் துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களுக்குப் பிறகு நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் முருகதாஸ் கூட்டணி அமைக்கவுள்ளார். இதனால் இப்போதே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முருகதாஸின் சமீபத்திய படங்கள் தோல்வியை தழுவினாலும் விஜய்யுடன் சேர்ந்தால் கண்டிப்பாக பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.
விஜய் முருகதாஸ் கூட்டணியில் புதுவரவாக புதிய இசையமைப்பாளர் களமிறங்க உள்ளார். தெலுங்கில் நம்பர்-1 இசையமைப்பாளராக வலம் வரும் தமன்(thaman S) தமிழில் சரியான இடம் கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.
அவருக்கு தளபதி65 படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளனர். மேலும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த தமன், தளபதி65 படத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
தளபதி65 படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளதாம். அதில் முதல் பாடல் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

thaman-tweet
