fbpx
Connect with us

Cinemapettai

தளபதி 65 படத்திற்கு இசையமைக்கப் போகும் விஜய்யின் மாஸ் ரசிகர்.. தெறிக்க விடப்போகும் புதிய கூட்டணி

vijay-65

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 65 படத்திற்கு இசையமைக்கப் போகும் விஜய்யின் மாஸ் ரசிகர்.. தெறிக்க விடப்போகும் புதிய கூட்டணி

தளபதி விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் ஏ ஆர் முருகதாஸ். தற்போது தளபதி 65 படத்தை அவர் தான் இயக்கப் போகிறார் என அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இன்னும் தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் கிட்டத்தட்ட உண்மையான தகவல்தான் அது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் தளபதி65 படத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார்.

இதனால் அப்போது தளபதி விஜய் இடம் அடுத்த படத்திற்கான கால்ஷீட்டை வாங்கி வைத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், மீண்டும் இருவரும் பணியாற்றி வசூல் ரீதியாக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை வைத்ததுள்ளதாம்.

இருந்தாலும் தளபதி விஜய் தற்போது இளம் இயக்குனர்களுடன் பணியாற்றுவதை அதிகம் விரும்புகிறாராம். அதன் வெளிப்பாடுதான் லோகேஷ் கனகராஜ் மற்றும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டது.

நீண்ட நாட்களாகவே தளபதி ரசிகர்கள் அனிருத்துடன் விஜய் மீண்டும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை மாஸ்டர் படத்தின் மூலம் சாத்தியமாக்கி னார் லோகேஷ் கனகராஜ்.

தற்போது நீண்ட காலமாக விஜய் பட வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கிக்கொண்டிருந்த விஜய்யின் தீவிர ரசிகர் தமன் தற்போது தளபதி 65 படத்திற்கு இசையமைக்க உள்ளாராம். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தமன் எப்போது விஜய் படம் கிடைக்குமென ஏங்கி பல பேட்டிகளில் கூறியது குறிப்பிடத்தக்கது.

தெறிக்க விடப் போகும் தளபதி 65.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top