Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 65 படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? விஜய்-முருகதாஸ் கூட்டணினா சும்மாவா!
தமிழ் சினிமாவில் மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தளபதி65 படத்தை தயாரிக்கப் போவது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது கிட்டத்தட்ட உறுதியான தகவல்.
தளபதி விஜய் நடிக்கும் தளபதி65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. தளபதி65 படத்திற்காக கிட்டத்தட்ட 175 கோடி முதல் 200 கோடி வரை பட்ஜெட் ஆக ஒதுக்கியுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
அதில் விஜய்யின் சம்பளமே 100 கோடி, முருகதாஸுக்கு 18 முதல் 20 கோடி, இசையமைப்பாளர் தமன் மற்றும் மற்ற டெக்னீசியன் செலவுகள் 5 முதல் 10 கோடி எனவும் செய்திகள் கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட 60 முதல் 70 கோடி வரை படத்திற்காக செலவு செய்ய உள்ளார்களாம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் தளபதி65 படத்திற்கான அறிவிப்புகளை அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என தெரிகிறது.
அனேகமாக ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கூட அந்த அறிவிப்பு இருக்கலாம் எனவும் செய்திகள் கிடைத்த வண்ணம் உள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் படத்தின் பட்ஜெட் அதிகமாக செலவு செய்ய இருக்கிறார்களாம்.
படமும் நல்ல பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என முருகதாசுக்கு கட்டளையிட்டு உள்ளதாக தெரிகிறது. கதையும் இருக்கணும் அதே சமயம் பிரம்மாண்டமும் இருக்கணும் என முருகதாசுக்கு இக்கு வைத்துள்ளார்கள் சன் பிக்சர்ஸ்.
