Connect with us

Cinemapettai

பேசிப்பேசியே தளபதி 65 பட வாய்ப்பை உஷார் பண்ணிய நடிகை.. செம கடுப்பில் பிரபல நடிகைகள்!

vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பேசிப்பேசியே தளபதி 65 பட வாய்ப்பை உஷார் பண்ணிய நடிகை.. செம கடுப்பில் பிரபல நடிகைகள்!

மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் தளபதி65 படத்தில் நடிக்க உள்ளார். அனேகமாக மே மாதமே வரவேண்டிய தளபதி65 படத்தின் அப்டேட் தற்போது நிலவி வரும் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் தள்ளிக் கொண்டே செல்கிறது.

அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படத்தையும் எப்போது வெளியிடுவது என தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தளபதி65 படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற செய்தி கூட இன்னமும் வெளிவரவில்லை.

ஏ ஆர் முருகதாஸ் பெயரே அரசல் புரசலாக தான் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது. ஏன் விஜய்யின் தளபதி65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதே இன்னும் உறுதி செய்யப்படாத தகவல் தான்.

இருந்தாலும் தளபதி65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்கப் போவதாக செய்திகள் ரசிகர்களை நம்ப வைத்து வருகின்றன. அந்த வகையில் தளபதி65 படத்தில் இதுவரை விஜய்யுடன் ஜோடி போடாத புதுமுக நடிகையை சேர்த்துள்ளார் முருகதாஸ்.

தெலுங்கு சினிமாவில் சமீபத்திய சென்சேஷனல் ஹீரோயினாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா தளபதி65 படத்தின் நாயகியாக வலம் வர உள்ளார். அதே சமயத்தில் இந்த செய்தி இன்னும் உறுதி செய்யவில்லை.

எப்படியோ பேசி பேசியே விஜய் பட வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டார் என பல நடிகைகள் அவர் மீது செம காண்டில் இருக்கிறார்களாம். ஜூன் 22ஆம் தேதி கண்டிப்பாக தளபதி விஜய்யின் தளபதி65 படத்தின் அப்டேட்டுகள் வெளிவரும் என தெரிகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top