fbpx
Connect with us

Cinemapettai

புட்ட பொம்மா பாடலை மிஞ்ச போகும் தளபதி65 பட பாடல்.. விஜய்யை மிரட்டிவிட்ட தமன்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புட்ட பொம்மா பாடலை மிஞ்ச போகும் தளபதி65 பட பாடல்.. விஜய்யை மிரட்டிவிட்ட தமன்!

தளபதி விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு நான்காவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தளபதி65 படத்திற்கு விஜய்யுடன் ஜோடி போடுவது எந்த நாயகி என்பதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் தளபதி65 படத்திற்கு இசை கண்டிப்பாக தமன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் சமீபத்தில் வெளிவந்த அளவைகுண்டபுரம்லோ எனும் படத்தின் பாடல்கள் மூலம் உலகப் புகழ் பெற்றார்.

அதனால் தற்போது தளபதி65 படத்திற்கும் தமன் இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் பல இசையமைப்பாளர்களை வயிற்றெரிச்சலில் தள்ளியுள்ளது.

தளபதி65 படத்தைப் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளிவராத நிலையிலும் தளபதி65 படத்திற்கான அனைத்து வேலைகளும் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் தளபதி65 படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை பதிவு செய்த தமன் அந்த பாடலை தளபதி விஜய் மற்றும் முருகதாஸுக்கு அனுப்பியுள்ளாராம். இருவருக்கும் பாடல் பிடித்துவிட்டதாம்.

தளபதி விஜய் அந்த பாட்டை கேட்டு விட்டு துள்ளி குதித்து விட்டாராம். தமிழ் சினிமாவில் தளபதி65 பட ஆல்பம் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என இப்போதே கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழத் தொடங்கியுள்ளன. மேலும் தளபதி65 படம் அதிரடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமன் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த புட்ட பொம்மா பாடல் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம். இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் கொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top