Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யின் தளபதி65 படத்தின் பட்ஜெட்டில் துண்டு.. மொத்தமா முருகதாஸ் தலையில் கைவைத்த சன் பிக்சர்ஸ்!
மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி65 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் கதை விவாதம் மற்றும் நடிகர் நடிகைகளின் தேர்வு ஆகியவை பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றன.
விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் அறிவிப்பை வெளியிட இருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் விஜய், முருகதாஸ் முழு கதையையும் ரெடி செய்த பின் அறிவிக்கலாம் என கூறி விட்டதாக தெரிகிறது.

murugadoss-cinemapettai
முருகதாஸின் கதைகளில் முன்னர் முன்னர் இருந்த சுவாரஸ்யம் தற்போது இல்லாதது விஜய்க்கு அப்பட்டமாகத் தெரிந்து விட்டதாம். இதனால் பல மாற்றங்களைச் செய்யச் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.
இது ஒருபுறமிருக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி65 படத்திற்காக 130 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாம். அதில் விஜய்யின் சம்பளம் மட்டுமே 80 கோடிக்கும் மேல் என்கிறார்கள் சினிமா வாசிகள்.
மற்ற நடிகர் நடிகைகளின் சம்பளம், முருகதாஸ் சம்பளம் ஆகிய அனைத்தையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 20 கோடிக்கு மேல் வந்து விடும். எவ்வளவு சிக்கனமாக முருகதாஸ் இந்த படத்தை எடுக்கப் போகிறோம் என விழித்து கொண்டிருக்கிறாராம்.
மேலும் தனக்கு சம்பளமே இல்லை என்றாலும் பரவாயில்லை, படத்தை சூப்பர் ஹிட்டாக கொடுத்தால் அடுத்தடுத்த படங்களில் சம்பாதித்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளாராம்.
