
மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்ததாக விஜய்(vijay) சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார்.
மேலும் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்து முடிந்தது.
தற்போது அடுத்ததாக சென்னையில் செட் அமைத்து ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். இதற்காக சென்னையில் உள்ள பெரிய ஸ்டூடியோ ஒன்றில் செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களாகவே தளபதி 65 படத்தில் வில்லன் யார் என்பதை முடிவு செய்யாமலேயே இருந்துள்ளது படக்குழு. அதற்கு காரணம் ஸ்டைலிஷ் ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தில் அதற்கு தகுந்த தரமான வில்லன் வேண்டும் என விரும்பியுள்ளனர்.
இதற்காக தெற்கிலிருந்து வடக்கு வரை உள்ள அனைத்து நடிகர்களையும் புரட்டிப்போட்ட படக்குழு கடைசியாக பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் ஜான் ஆபிரகாம் என்பவரை ஒப்பந்தம் செய்ய உள்ளதாம்.

விஜய்க்கு செம ஸ்டைலான கதாபாத்திரம் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் வில்லன் கதாபாத்திரம் ஸ்டைலாகவும் அதே நேரத்தில் மிரட்டல் தோற்றத்திலும் இருக்க வேண்டும் என்பதற்காக இவரை தேர்வு செய்துள்ளார்களாம். சம்பள விஷயம் ஒத்து வந்தால் இவர் நடிப்பது உறுதியாகி விடும் என்கிறது சன் பிக்சர்ஸ் வட்டாரம்.