Connect with us
Cinemapettai

Cinemapettai

thalapathy65-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் தளபதி 65 படத்திற்கு ஜார்ஜியாவில் வந்த புதிய சிக்கல்.. ஊத்தி மூடப்படுகிறதா சூட்டிங்?

தளபதி விஜய் நடிப்பில் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டுள்ள தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்க்கு பெரிய அடியை கொடுத்துள்ளது.

நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த தளபதி 65 படம் ஒருவழியாக சமீபத்தில் பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஜார்ஜியாவில் அடிக்கடி மழை பெய்து வருவதாக கூறுகின்றனர். இதன் காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த முடியாமல் தளபதி 65 படக்குழுவினர் தடுமாறி வருகிறார்களாம்.

இதனால் சன் நிறுவனத்திற்கு தளபதி 65 படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் அடி விழும் என தெரிகிறது. முன்னதாக ரஷ்யாவில் பிளான் செய்யப்பட்ட தளபதி 65 படத்தின் படப்பிடிப்புகள் கடைசி நேரத்தில் ஜார்ஜியா நாட்டுக்கு மாற்றப்பட்டது.

தளபதி 65 மூன்றாவது முறையாக அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் முதல் முறையாக தெலுங்கு சினிமாவின் சென்சேஷனல் நடிகை பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

ஜார்ஜியாவில் படப்பிடிப்பு முடிந்தவுடன் மே முதல் வாரத்தில் சென்னையில் தொடங்க இருந்த படப்பிடிப்பு தற்போது தள்ளிப்போகும் என தெரிகிறது. இருந்தாலும் கிடைக்கும் கேப்பில் படப்பிடிப்பை தொய்வில்லாமல் நடத்துவதில் ஆயுத்தமாக இருக்கிறாராம் நெல்சன். இருந்தாலும் திட்டமிட்டபடி தளபதி 65 படத்தின் ஜார்ஜியா படப்பிடிப்பு நடக்குமா என்பது சந்தேகம்தான். கூடுதலாக நாட்கள் இழுக்கும் என தெரிகிறது.

thalapathy65-cinemapettai

thalapathy65-cinemapettai

Continue Reading
To Top