Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் படத்துக்கு முன்னாடியே தேர்வு செய்யப்பட்ட தளபதி 65 பட ஹீரோயின்.. அடித்து நொறுக்கும் அடுத்த நயன்தாரா
தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அப்போது விஜய் சேதுபதி தளபதி விஜய்க்கு முத்தமிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது.
இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 65 படத்தின் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் தளபதி விஜய், தளபதி 65 படத்தின் இயக்குனரை தேர்வு செய்யவில்லை என பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும் விஜய் தனது அடுத்த படத்தின் இயக்குனரை ஏற்கனவே உறுதி செய்து விட்டார் எனவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் தெரிகிறது.
அனேகமாக சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம் சூரரைப்போற்று படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள செய்தி உறுதியாக்கி உள்ளது.
இந்நிலையில் தளபதி 65 படத்தின் கதாநாயகியாக தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம்வரும் ரஷ்மிகா மந்தனா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் ரஷ்மிகா நடிக்க இருந்ததாகவும் தேதிகள் காரணமாக அந்த வாய்ப்பு கைகூடவில்லை என்றும் செய்திகள் கிடைத்துள்ளது.

rasmika-mandhanna
ஆனால் அப்போதே தளபதி விஜய்க்கு ரஷ்மிகாவை ஜோடியாக்கி விட வேண்டும் என தளபதி 65 படத்திற்கான வாய்ப்பை முன்னரே கொடுத்ததாக தெரிகிறது. விரைவில் தளபதி விஜய் உடன் ரஷ்மிகா மந்தனா நடிக்கும் செய்தி அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
வெல்கம் டு தமிழ்நாடு செல்ல குட்டி.
