Tamil Cinema News | சினிமா செய்திகள்
விவரமாக இயக்குனர்களை தேர்ந்தெடுக்கும் விஜய்.. அதனால்தான் தளபதி 65 படத்திற்கு இவர்
தளபதி விஜய் சமீபகாலமாக இயக்குனர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருந்து வருகிறார். எல்லாருக்குமே சினிமாவில் சோதனை காலம் என்று ஒன்று உள்ளது. அப்படி விஜய்க்கு சோதனை காலமாக அமைந்தது 2007 முதல் 2010 வரைதான்.
அந்த சமயத்தில் வெளியான படங்கள் அனைத்தும் தொடர் தோல்விகளை சந்தித்து விஜய் சினிமாவை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை வந்துவிட்டதா என யோசிக்கும் மனநிலைக்கு ரசிகர்களை மாற்றிய காலகட்டம். ஆனால் காவலன் படத்தில் இருந்து தளபதி விஜய்யின் கதைத் தேர்வு சிறப்பாகவே உள்ளது.
வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில் சமீபகாலமாக தளபதி விஜய் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதற்கு அவர்கள் இயக்கிய முந்தைய படங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் படங்கள் தொடர்ந்து 200 கோடிக்கு மேல் வசூல் செய்வதால் கூடுதல் பொறுப்பும் தளபதி மீது உள்ளது.
மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட கைதி படத்தை ரிலீசுக்கு முன்பே தளபதி விஜய்க்கு போட்டு காட்டி விட்டு தான் இயக்குனராக வாய்ப்பு பெற்றாராம். அதேபோல்தான் தளபதி 65 படத்தை யார் இயக்கப் போகிறது என ஏகப்பட்ட கேள்விகள் வந்து கொண்டிருந்த வேளையில் மாஸ்டர் படத்துடன் போட்டியில் களமிறங்க இருக்கும் சூரரைப்போற்று படத்தை பார்த்தபிறகு சுதா கொங்கராவை அடுத்த படத்தின் இயக்குனராக டிக் அடித்து விட்டார் தளபதி விஜய்.
மேலும் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி65 படத்தின் அறிவிப்பை மாஸ்டர் படம் வெளியான பிறகு தெரிவிக்கலாம் என தயாரிப்பு தரப்பு வெயிட் செய்கிறதாம்.
அடி தூள்!
