fbpx
Connect with us

Cinemapettai

இந்திய அளவில் ட்ரெண்டான தளபதி-64 லேட்டஸ்ட் அப்டேட்.. ரசிகர்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்திய அளவில் ட்ரெண்டான தளபதி-64 லேட்டஸ்ட் அப்டேட்.. ரசிகர்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவது தளபதி விஜய். கடந்த தீபாவளியன்று இவர் நடிப்பில் வெளியான பிகில் படம் எவரும் தொடமுடியாத வசூலைப் பெற்றது.

இன்னும் பிகில் தாக்கமே தமிழ்நாட்டில் ஓயாத நிலையில் தளபதி விஜய்யின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருக்கிறது. தளபதி விஜய் மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

முதன்முறையாக தளபதி விஜய் கல்லூரி பேராசிரியர் வேடத்தில் நடிக்க இருப்பதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு புத்தாண்டு வெளியீடாக வரவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அடுத்த வருடத்தை தளபதியுடன் சேர்ந்து தொடங்க இருப்பதை நினைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்திய அளவில் ட்ரெண்டிங் கொண்டுவரப்பட்ட 6 மணிக்கு வெளியான இந்த செய்தியின் எதிர்பார்ப்பு ரசிகர்களை அதிர்ச்சியாக உள்ளது. படத்தின் டைட்டில் வெளிவரும் என்று எதிர்பார்த்தது ஆனால் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top