fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யின் சூப்பர் ஹிட் பட இயக்குனர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் தளபதி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் சூப்பர் ஹிட் பட இயக்குனர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் தளபதி

விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவரின் மரணம் விஜய்யை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

விஜய் அனுஷ்கா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் வேட்டைக்காரன்.

விஜய் ஆண்டனி இசையமைத்த இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. பின்னர் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை வாங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கியவர் பாபு சிவன்.

விஜய் ஆண்டனி இசையில் வேட்டைக்காரன் படத்தில் உருவாகியிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

வேட்டைக்காரன் படம் வெற்றிப் பெற்ற நிலையிலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சன் டிவி குழுமத்தில் சீரியல் இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாபுசிவன் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் விஜய்யை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் விஜய் இவருக்கு உதவி செய்ய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

Continue Reading
To Top