fbpx
Connect with us

Cinemapettai

சிக்கிய விஜய் ..! இனி அரசியல் ஆரம்பம்.

vijay-selvaraghavan

News | செய்திகள்

சிக்கிய விஜய் ..! இனி அரசியல் ஆரம்பம்.

20 சதவீதம் கருப்புப்பணத்தை மீட்க, 80 சதவீத மக்களை இவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கணுமா? மருத்துவ செலவுக்கு கூட பணம் மாற்ற முடியாமல் இறந்து போனவர்களை நினைத்தால் வருத்தமா இருக்கு என்று அவர் விமர்சித்தது பெரிய துணிச்சல்தான். இதற்கப்புறம் பின் விளைவுகள் இல்லாமலிருக்குமா?

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பிரமுகர் வானதி சீனிவாசன், விஜய்க்கு பதில் கொடுத்திருக்கிறார். இவர் மட்டுமல்ல, இவரைப் போன்றவர்கள் இனி வரிசையாக வருவார்கள் என்று தெரிகிறது.. வானதியின் பதில் இது-

பேத்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் ஒரு பாட்டி இறந்து விட்டார்… அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். மருத்துவச் செலவுக்கு பணம் இல்லையே என்று இப்போது அல்ல; முன்பும் இறந்து போயிருக்கிறார்கள். ஏழை, எளிய மக்கள் மீது கரிசனம் காட்டும் இவர்கள், தாங்கள் வைத்துள்ள பணத்தில் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானது போக மீதியை இந்த ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் போட்டால் ஏழை மக்களின் வேதனை, துயரம் போக்க உதவிகரமாக இருக்கும். அறிக்கை விடுவதை விட்டு விட்டு, பொது வெளியில் வந்து ஏழை எளிய மக்களின் கண்ணீர் துடைக்க உதவுங்கள். நாட்டு மக்களின் பிரச்சினைகளை சரி செய்ய மோடி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top