Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அரசியலில் களமிறங்குகிறார் தளபதி; கொளுத்தி போட்ட விஜய் ரசிகர்கள்

கோலிவுட்டின் தளபதி விஜய் அரசியலில் வர இருப்பதாக மதுரையில் ஓட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பல பூகம்பங்கள் கிளம்பி வருகிறது. கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் எண்ட்ரியை அறிவித்து விட்டார். ஆனால், புதுக்கட்சி தொடங்கும் அறிவிப்பு தான் இன்னும் வரவில்லை. உலகநாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார்.

இக்கட்சியின் பொதுக்கூட்டமும் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. நடிப்பை விட்டு அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறார் கமல்ஹாசன். அட இந்த கேள்விக்கு பதில் கிடைச்சாச்சு அடுத்த கேள்வி கேட்க வேணுமே என்ற மூடில் இருக்கும் ரசிகர்கள்.

அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய் மற்றும் அஜித் எப்போது அரசியலுக்கு வருவார்கள் என கிசுகிசுக்க தொடங்கினர். அஜித் தரப்பில் ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டதாலும், அவர் பேட்டி கொடுப்பதை தவிர்ப்பதாலும் அஜித் படையில் சற்று அமைதியே நிலவுகிறது. ஆனால், தளபதி விஜய் எங்கு போனாலும், என்ன கருத்து சொன்னாலும் அரசியலுக்கு நுழைய இருக்கிறாரோ என பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

அவர் மற்றும் அவர் தந்தையிடம் பல பேட்டிகளில் இந்த கேள்வி முதன்மையாக வைக்கப்பட்டு வருகிறது. அவர்களும் இல்லை என்றும், இப்போது இல்லை என்றும் தொடர்ந்து பதில் அளித்து தான் வருகின்றனர்.

இருந்தும், இந்த பூகம்பத்திற்கு ஒரு முடிவு வந்தப்பாடு இல்லை. அரசியல் எண்ட்ரி என்றால் முதலில் ஆதரிப்பது என்னவோ ரசிகர்கள் தான். ஆனால், எண்ட்ரிக்கு முன்னரே ஆதரவை தெரிவித்து இருக்கிறது மதுரை தளபதி படை. அவர் வரும் ஜூன் 22ல் அரசியலில் களம் இறங்க இருப்பதாக செய்தித்தாள்களில் வெளியானது போல ஒரு போஸ்டரை ஒட்டு இருக்கின்றனர்.

மதுரை முழுவதும் ஒட்டப்பட்டு இருக்கும் இந்த போஸ்டர் உண்மையோ என நினைக்கும் அளவிற்கு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அட, விஜய் தனது 62வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவரை ஏனப்பா வம்புக்கு இழுக்குறீர்கள் என நெட்டிசன்கள் டுவீட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top