Tamil Cinema News | சினிமா செய்திகள்
விவாத நிகழ்ச்சியில் விஜய்! தப்பிக்குமா அரசியல் கட்சிகள்
விஜய் முருகதாஸ் இணைப்பில் நடந்து கொண்டிருக்கும் சர்க்கார் படப்பிடிப்பு நுங்கம்பாக்கத்தில் நடந்து முடிந்தது. சர்க்காரில் சுந்தர் பிச்சை போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் இந்த படத்தில் தனது ஓட்டை மற்றொருவர் கள்ள ஓட்டாக போடுவார், அதனால் தமிழகம் வரும் விஜய் இங்கு நிலவும் அரசியல் சூழல் பிடிக்காமல் தான் ஒரு கட்சியை தொடங்கி ஒரு பெரிய மக்கள் படையை உருவாக்குவார்.

Sarkar
விஜய் அரசியலில் பெரிய அளவில் வரும் நிலையில் அவரை வைத்து ஒரு விவாத நிகழ்ச்சி தொலைகாட்சியில் நடைபெறும். காரசார விவாதம் நடந்து கொண்டிருக்கும் அந்த விவாத நிகழ்ச்சியில் விஜய் திடீரென வருகை தருவார்.
அனைத்து சர்ச்சைகளுக்கும் விஜய் பதிலளித்து இந்த விவாத நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்.
விவாத நிகழ்ச்சி, பிரபல நியூஸில் ஒளிபரப்பாகும் விவாத அரங்க நிகழ்ச்சி போலவே படமாக்கப்பட்டிருக்கிறது. இது, ஒரிஜினல் நிகழ்ச்சி போலவே படமாக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என தயாரிப்புத் தரப்பினர் கூறுகின்றனர்.
மெர்சல் படம் போன்று இந்த படத்திலும் பல கருத்துக்கள் விஜய் இங்கே முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சல் படம் போன்று அரசியல் கட்சிகள் பிரச்சினைகள் பண்ணினாலும் அவர் தயங்காமல் அடுத்த படத்திலும் தன் கருத்துகளை சொல்வார் என எதிர்பார்க்கலாம்.
