Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாரசைட் படத்தின் மீது வழக்கு போடும் விஜய் பட தயாரிப்பாளர்.. என்னடா இது ஆஸ்காருக்கு வந்த சோதனை
சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் கொரியன் படமான பாரசைட் படம் 4 ஆஸ்கர் விருதுகளை குவித்து சாதனை படைத்தது. ஆனால் அந்த படத்தின் கதை கரு தமிழில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா படத்தின் கதைக்கரு என செய்தி கிளம்பியது.
இதுகுறித்து சமீபத்தில் கேஎஸ் ரவிக்குமாரும் பேட்டி கொடுத்து இருந்ததால் இந்த படத்தின் மீதான கவனம் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து உண்மையிலேயே மின்சார கண்ணா படம் தான் கொரியன் மொழியில் பாரசைட் படமாக வந்துவிட்டதா என ரசிகர்கள் ஆர்வமுடன் அதனை தேட ஆரம்பித்தனர்.
தற்போது மின்சார கண்ணா படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் பாரசைட் படத்தின் மீது கேஸ் போட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்கார் விருதுகளை வென்ற படத்தின் மீது ஒரு தயாரிப்பாளர் கேஸ் போடுகிறேன் என்று கூறுவதால் பரபரப்பு உச்சத்தை தொட்டுள்ளது.
ஒருவேளை மின்சார கண்ணா படத்தின் கதைக் கருவும் பாரசைட் படத்தின் கதையும் ஒன்று என தெரிந்தால் கொடுத்த 4 ஆஸ்கர் விருதுகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஆகையால் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மொத்த சினிமா உலகத்தினர் இடையே அதிகரித்துள்ளது.
என்னடா இது ஆஸ்கருக்கு வந்த சோதனை!
