Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் யார் தெரியுமா? அவர் பம்பும் போதே நினைச்சேன்
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் தான். தன்னுடைய 27 வருட சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக வித்தியாசமாக நடித்துள்ளார் விஜய்.
அந்த மாஸ்டர் படம் வெளியாகாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல மாஸ்டர் படத்தை யாரேனும் இன்டர்நெட்டில் விட்டு விடுவார்களா என்ற பயமும் கூடிக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய அப்டேட் ஒன்றை வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது அனைவருக்குமே தெரியும்.
ஆனால் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதிக்கு சின்னவயதில் இருப்பதுபோன்ற ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இருக்கிறதாம். அதில் சிறிய விஜய் சேதுபதியாக மாஸ்டர் மகேந்திரன் என்பவர் நடித்துள்ளாராம்.
அதிலும் புதுமையாக அந்த மாஸ்டர் மகேந்திரனுக்கும் விஜய்சேதுபதியே டப்பிங் பேசியுள்ளாராம். இது தற்போது விஜய் ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் மகேந்திரன் அனைவருக்கும் தெரிந்த நடிகர் என்றாலும் மாஸ்டர் படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அப்டேட்டுகள் வெளி வந்தபோது அவரைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் தெரிவிக்கப்படவில்லை.
படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்ற லோகேஷ் கனகராஜ் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள்.
