Videos | வீடியோக்கள்
விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘வாத்தி கம்மிங்’ வீடியோ பாடல் ரிலீஸ்.. கொல குத்து, மரண குத்து!
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாஸ்டர் படம் உலகம் முழுவதும் 200 கோடி வசூலைக் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் வலுவான பவானி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் படத்தில் குட்டி பவானி ஆக நடித்த மாஸ்டர் மகேந்திரன் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சாந்தனு, 96 புகழ் கௌரி போன்றோர் ரசிகர்களை ஏமாற்றினார். இருந்தும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி காட்சிகள் அதிகம் இருப்பதால் இவை பெரிதாக ரசிகர்களால் கண்டுகொள்ளப்படவில்லை.
ஆனால் அனிருத் இசையில் பாடல்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிட வேண்டிய ஒன்று. அதிலும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை தியேட்டரை அதிர வைத்தது. அதுவும் வாத்தி கபடி சாங் எல்லாம் வேற லெவல் தான்.
என்னதான் மாஸ்டர் படத்தில் பல பாடல்கள் இடம் பெற்றிருந்தாலும் விஜய்யின் ஓப்பனிங் ‘வாத்தி கம்மிங் பாடல்’ வெளியாகும் போதே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தில் பார்க்கும்போது செம்ம மாஸாக இருந்ததாக பலரும் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் வாத்தி கம்மிங் வீடியோ பாடல் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் வாத்தி கம்மிங் வீடியோ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.
விஜய்யின் முந்தைய பாடல்களின் சாதனையை வாத்தி கமிங் பாடல் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு விஜய்யின் நடனம் பாடலில் மிரட்டலாக இருந்ததாக பலரும் குறிப்பிட்டனர்.
